Breaking News

கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் விளையாட்டு நிகழ்வுகள்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபிர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் புதன்கிழமை (15) கற்பிட்டி புட்செல் உள்ளக விளையாட்டரங்கில் பாலர் பாடசாலையின் அதிபர் எம்.ஜே.என் பாஹீமா தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது 


இவ் விளையாட்டு போட்டி நிகழ்வின் அதிதிகளாக கற்பிட்டி பிரதேச சபையின் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரூபீகா ஜெயமாலி , கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில், மண்டலக்குடா கிராம உத்தியோகத்தரும் கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் பொருளாளருமான ஏ.எச் எப் பர்வின். கற்பிட்டி பிரதேச செயலகத்தின் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் எச் எம் நிப்ராஸ், இளைஞர் சேவை உத்தியோகத்தரும் செடோ சிறிலங்கா நிறுவனத்தின் பணியாளருமான ஏ ஆர் முனாஸ். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கற்பிட்டி கிளையின் செயலாளர் அஷ்ஷெய்க் மிக்தாத் றஹ்மானி, கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் அதிபரும்  தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் தலைவருமான எஸ் எம் அருஸ், அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபரும் தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் உப தலைவருமான எம் எம் எம் நவ்ப், ஒய்வு நிலை உடற்கல்வி பணிப்பாளர் எஸ்.டி.எம் பைறுஸ்ஸமான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 


கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களாக இஸ்லாமிய பாலர் பாடசாலையை வெற்றிகரமாக நடாத்தி வரும் ஜன்னத்துல் அஸாபிர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் அதிபர் எம்.ஜே.என் பாஹீமா மற்றும் ஆசிரியர்களான ஏ.சீ யசினத் பானு, எம்.ஆர்  றஹ்னா, ஜே.கே ஜெஸானா, எம்.ஐ ஆகிலா ஆகியோரின் விடா முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்த இஸ்லாமிய பாலர் பாடசாலை வளர்ச்சி பாதையில் செல்கின்றமை  மறுக்க முடியாத உண்மையாகும் என்பதுடன் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்ட சகல பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் வெற்றி கேடயங்களும் சிறுவர் தின நினைவுச் சின்ன பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிபரினால் பாலர் பாடசாலையின் சகல ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நினைவு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்னர்.


இவ் விளையாட்டு நிகழ்வுகளின் நடுவராக கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் எம்.டீ.எம் பஸாஜ் கடமையாற்றியதுடன் நிகழ்ச்சிகளை திறம்பட கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம் அஸ்கர் தொகுத்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.











No comments