Breaking News

அமெரிக்க கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS FITZGERALD’ (DDG 62) வெள்ளிக்கிழமை (03) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.


இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Destroyer வகைக் கப்பலான ‘USS FITZGERALD’ (DDG 62) கப்பல் 154 மீட்டர் நீளம் கொண்டதுடன் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் Paul Richardson கடமையாற்றுகின்றார்.


மேலும், விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்யதப் பின் ‘USS FITZGERALD’ கப்பலானது தீவில் இருந்து புறப்படவுள்ளது.






No comments