Breaking News

கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 408 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இந்தியாவிலிருந்து கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 408 கிலோகிராம் பீடி இலைகளை கொண்டு செல்ல முற்பட்ட சந்தேக நபரை கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன் படுத்திய பொலோரோ ஜீப் வண்டியையும் நுரைச்சோலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் வியாழக்கிழமை (02)  இரவு இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.


பொலிஸ் சிறப்பு பணியகத்தின் கற்பிட்டி பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விஷேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது 


பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 13 பீடி இலைகள் அடங்கிய பொதிகள் மற்றும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு பொலேரோ ஜீப்பும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.


பீடி இலைகளுடன் கைது செய்யப்பட்டவர் புத்தளத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் ஜீப் வண்டி என்பன புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன்


நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments