Breaking News

வருமுன் காப்போம் செயற்திட்டம்.

எம்.யூ.எம்.சனூன்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை "வரு முன் காப்போம்" எனும் திட்டம் வெற்றி பெற ஜே.சி.பி. இயந்திரத்திற்கான நிதி உதவியை வழங்கியுள்ளது.


புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் மழை நீர் தேங்கும் இடங்களை சுத்தப்படுத்தி மழை நீரை வேகமாக கடலுக்கு அனுப்ப வேண்டும் எனும் நோக்கில் வாஹித் பள்ளி தொடக்கம் குபா நகர் வரை இயந்திரத்தினால் 6 மணித்தியாலங்கள் துப்பரவு செய்வதற்க்கான பணத்தை வழங்கியுள்ளது.


இந்த நிதியினை ஜம்இய்யாவின் செயலாளர் அஷ்ஷெய்க் அஸீம் (ரஹ்மானி) இயந்திரத்தின் இயக்குனரிடம், புத்தளம் பிரதேச சபை முள்ளிபுரம் பகுதி உறுப்பினர் ஏ.ஆர்.எம். நில்பான் முன்னிலையில் உத்தியபூர்வமாக ஒப்படைத்தார்.


ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பி.ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான ரனீஸ் பதியுதீன், புத்தளம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் முஹம்மது ரிபாய் ஆகியோரும் இதன்போது பிரசன்னமாயிருந்தனர்.








No comments