Breaking News

மாதம்பை அல்-மிஸ்பாஹ்வின் ஆசிரியர் தின நிகழ்வுகள்.

எம்.யூ.எம்.சனூன்

சிலாபம் கல்வி வலயத்துக்குட்பட்ட மாதம்பை அல்-மிஸ்பாஹ் பாடசாலை  ஆசிரியப் பெருந்தகைகளின் ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வரின் தலைமையிலும், வழிகாட்டுதலிலும் உயர் தர மாணவர்களின் சிறப்பான பங்களிப்புடனும் இனிதே நடைபெற்றன.


இதில் ஆசிரியர்களுக்கான வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகள், கல்வியின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டும் விதமாக நாடகமூட்டும் படிப்பினைகளும் சிறப்பாக அரங்கேறின.


இதன் போது சிறந்த சேவையாற்றும் அனைத்து ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.


"ஒரு தேசத்தின் அடித்தளம் செங்கல் கற்களால் அல்ல, மாறாக நல்ல ஆசிரியர்களின் அர்ப்பணிப்பால் இடப்படுகிறது. ஒவ்வொரு மாணவனின் வெற்றிக்கு பின்னால் தன்னலம் கருதாத ஒரு ஆசிரியரின் உழைப்பும், வழிகாட்டுதலும், தியாகமும் நிச்சயம் இருக்கும்" என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றிய அதிபர் எஸ்.எல்.அன்வர் தனது உரையின்போது தெரிவித்தார்.




No comments