Breaking News

புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களையும், ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விழா.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களையும், மாணவர்களுக்கு கற்பித்த அனைத்து ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விழா அண்மையில் புத்தளம் ஐ.பி.எம்.மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.


பாடசாலை அதிபர் எச்.யூ.எஹியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாநகர சபை முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் கலந்து கொண்டார்.


கௌரவ அதிதிகளாக மாநகர சபை உறுப்பினர்கள், தொழிலதிபர் வை.எம்.ரிஸ்வி, ஆரம்ப பிரிவுக்கான ஆசிரிய ஆலோசகர் ஏ.ஏ.ஹபீல் ஆகியோரும், விசேட அதிதியாக முஸ்லிம் ஹேன்ட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எம்.மிஹ்லார் உள்ளிட்ட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஜே.எம்.நளீம் மற்றும் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை வீதி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அயற்பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


பரீட்சைக்கு தோற்றிய அனைத்து  210 மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், பரிசில்களும், நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை சார்பாக நினைவுச்சின்னங்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


நிகழ்வுக்கு அதிதிகளாக வருகை தந்த அனைவருக்கும் பாடசாலை சார்பாக நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


விழாவினை சிறப்பாக நடாத்தி முடிக்க தேவையான  அனைத்து  ஏற்பாடுகளையும், உதவிகளையும், தன்னாலான நன்கொடைகளையும் வழங்கிய விழா ஏற்பாட்டு பெற்றோர் குழுவினருக்கும் பாடசாலை சார்பாக  நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


பாடசாலை அபிவிருத்தி சங்கம், மற்றும் பரிசளிப்பு விழா பெற்றோர் குழு ஆகியோரால் இவ்விழாவில் அதிபர் எச்.யூ.எஹியா விசேடமாக நினைவுச்சின்னம், மற்றும் பரிசில் வழங்கி மாநகர முதல்வர் முன்னிலையில் அனைவராலும் கௌரவிக்கப்பட்டார்.


பரீட்சையில் முதலாம் இடம் பெற்ற மாணவி எச்.பாத்திமா ஹசிகா (161)  மடிக்கணணி ஒன்று வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மடிக்கணனியை தொழிலதிபர் வை.எம்.ரிஸ்வி வழங்கி இருந்தார்.


விழாவினை சிறப்பாக நடாத்தி முடிக்க அயராது உழைத்த பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், மற்றும் இப்பரிசளிப்பு விழாவிற்காக அமைக்கப்பட்ட விசேட ஆசிரியர் குழுக்கள், பரிசளிப்பு விழா பெற்றோர் குழுவினர், அபிவிருத்தி சங்கத்தினர், சிற்றூழியர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பான மனமார்ந்த நன்றிகளை அதிபர் தெரிவித்துள்ளார்.
























No comments