Breaking News

மலேசிய Geomatika பல்கலைக் கழகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட சர்வதேச பிரதிநிதியாக கலாநிதி ஏ.எம்.ஜெமீல் நியமனம்.!இலங்கையில் பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு துரித ஏற்பாடு.!

 (அஸ்லம் எஸ்.மெளலானா)

மலேசியாவில் அமைந்துள்ள University of Geomatika பல்கலைக்கழகத்தின் (UGM) அதிகாரமளிக்கப்பட்ட சர்வதேச பிரதிநிதியாக (Authorized International Representative) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவரும் College Of Management & Technology ஸ்தாபகருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதற்கமைவாக முதற்கட்டமாக இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மாலைதீவு, கனடா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் மேற்படி பல்கலைக் கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை வழிநடாத்துவதற்கான பொறுப்பு இவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 22 ஆம் திகதி மலேசியாவிலுள்ள குறித்த பல்கலைக்கழகத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.


இதன் பிரகாரம் இலங்கையில்- கொழும்பில் அமைந்துள்ள Institute of Global Project Campus மற்றும் Global Academic Hub Campus ஆகிய இரண்டு உயர் கல்வி நிறுவனங்களிலும் மேற்படி பல்கலைக் கழகத்தின் பல்வேறு கற்கை நெறிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


ODL programs: Online மூலம் பின்வரும் பட்டப்படிப்பு கற்கை நெறிகள் நடாத்தப்படவுள்ளன.


* Master of Business Administration (MBA) program எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பம்.


ஏனைய கற்கை நெறிகள் அடுத்த வருடம் ஜனவரியில் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


1. Bachelor's  Business Administration (BBA)


2. Bachelor's of Information Technology ( BIT)


3. Master of Education (Education Management) - MEd.


4. Doctor of Philosophy (Information Technology)


5. Doctor of Education (Education Management)


6. Diploma in Early Childhood Education.






No comments