குருணாகல் விபத்து நால்வர் உயிரிழப்பு
(உடப்பு செய்தியாளர்-க.மகாதேவன்)
குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் வேனில் பயணித்தவர்கள் ஆவர்.
இவ்விபத்தில் மேலும், மூவர் காயமடைந்தும் உள்ளனர். இந்த விபத்து இனறு (25) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments