Breaking News

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவியர் சங்கத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீதி திறந்து வைக்கப்பட்டது.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவியர் சங்கத்தினரால் சுமார் ஐந்து இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா (550,000/=) பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலையின் உள்ளக பிரதான வீதி அண்மையில் (18) திறந்து வைக்கப்பட்டுள்ளது.


புத்தளம் தெற்கு பிராந்தியத்தில் பழைய மாணவியர் சங்கம் என்ற ஒன்று இயங்கும் ஒரே பாடசாலையான கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவியர் சங்கத்தினரால் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை வெற்றிகரமான நிகழ்வாக கருதப்படுகிறது.


பாடசாலையின் அதிபர் பீ. எம். முஸ்னி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார், புத்தளம் வலய பிரதிக் கல்விப் பணிபாளர்களான திருமதி சீ.ஐ. சுஜீவிகா சந்திரசேகர, திருமதி காந்திலதா, புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. எம்.நௌஸாத், ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.இஸ்மத், தெற்கு கோட்ட தமிழ் பாட இணைப்பாளர் வீ. லெஸ்லி, கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஐ. என். எம்.எம்.லாஹிர், முன்னாள் அதிபர் (ஓய்வு நிலை) என்.எம்.எம். நஜீப் மற்றும் ஊர் பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், பழைய மாணவர் மற்றும் மாணவியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


குறித்த இந்நிகழ்வை பாடசாலையின் பழைய மாணவியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



















No comments