Breaking News

புத்தளம் பொது நூலகத்தில் பாடசாலை நூலகங்களின் நூலகர்களுக்கான செயலமர்வு.

எம்.யூ.எம்.சனூன்

தேசிய வாசிப்பு மாதம் மற்றும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு புத்தளம் மாநகர சபையின் பொது நூலகம், பாடசாலை நூலகங்களின் நூலகர்களுக்கான செயலமர்வு ஒன்றினை அண்மையில் (19) நடாத்தியது.


இந்த செயலமர்வானது, புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மதின் வழிகாட்டலில் புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் கே.ம்.நிஷாத்  தலைமையில் அண்மையில் நடைபெற்றது  


இந்த செயலமர்வில் நூலகப் பகுப்பாக்கம், நூல்களை சேர்வு இடாப்பில் பதிவு செய்தல், பாடசாலை நூல்கள் தொடர்பாக எதிர் கொள்ளும் சவால்கள்  போன்ற தலைப்புக்களில் விரிவுரைகள் நடாத்தப்பட்டன.


புத்தளம் மா நகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி ரதி பிரதீப் மற்றும் நூலக அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.







No comments