மதுரங்குளி மல்லம்பிட்டி பிரதேசத்தின் குடிநீர் விநியோக திட்டத்தை துரித கதியில் பெற்றுக்கொடுக்க புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் உறுதி.
எம்.யூ.எம்.சனூன்
மதுரங்குளி மல்லம்பிட்டி பிரதேசத்தின் குடிநீர் விநியோக திட்டத்தை துரித கதியில் பெற்றுக்கொடுக்க புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
சுமார் 60 குடும்பங்கள் வாழ்கின்ற இந்தப் பிரதேசத்தின் குடிநீர் விநியோகம் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்து வருவதாக பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதனை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் பிரதேசத்தின் பொது மக்களோடு கலந்துரையாடி இந்த பிரச்சினையை கூடிய விரைவில் தீர்த்து தருவதாக இதன் போது உறுதியளித்தார்.
No comments