புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் புத்தளம் பாலாவி முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு விஜயம்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பாலாவி முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம்.எப்.எம்.மபாஹிர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரின் வேண்டுகோளின் பேரில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் அண்மையில் பாடசாலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
அங்கு காணப்படுகின்ற குறை நிறைகளை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருடன் கேட்டு அறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அவைகளுக்கு விரைவில் தீர்வை பெற்று தருவதாகவும் இதன்போது உறுதி அளித்தார்.
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கு கலந்துரையாடினார்.
புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் முஹம்மது கியாஸும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினருடன் பிரசன்னமாகி இருந்தார்.
No comments