"சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை" முன்னிட்டு விஷேட கலந்துரையாடல்.
எம்.யூ.எம்.சனூன்
"சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை" முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 2025 ஆம் ஆண்டிற்கான விஷேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் (11) புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
"அது நானாகவும் இருக்கலாம்" என்ற தொணிப்பொருளில் நடைபெற்ற இந்த விஷேட கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான சிரேஷ்ட வழக்கறிஞர் நிமல் புஞ்சிஹேவா மற்றும் கலாநிதி கெஹான் குணத்திலக்க ஆகிய இருவரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிரேஷ்ட மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை காரியாலயத்தின் அதிகாரிகள், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கு பற்றினர்.
இக்கலந்துரையாடலில் சித்திரவதை தொடர்பான சட்டதிட்டங்கள், சித்திரவதை தொடர்பில் இதுவரையில் நீதிமன்றங்களினால் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அரசுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பிலும், அவற்றை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டன.
இக்கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புத்தளம் காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
No comments