புத்தளத்தில் சேவையில் இருந்த பஸ்களை மீண்டும் கொண்டு வர மாநகர சபை உறுப்பினர் முர்ஷித் முயற்சி.
எம்.யூ.எம்.சனூன்
இலங்கை போக்குவரத்து சபையின் புத்தளம் சபைக்கான முகாமையாளரை திங்கட்கிழமை (29) புத்தளம் மாநகர சபை உறுப்பினரான எம்.எம்.எம்.முர்ஷித் சந்தித்து மனுவொன்றை வழங்கி வைத்தார்.
புத்தளம் இ.போ.சபை நிலையத்திற்கு சொந்தமான இரண்டு குளிரூட்டிய பஸ்கள் கல்பிட்டி மற்றும் புத்தளம் கொழும்பு சேவையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அது இரண்டும் திடீரென நிறுத்தப்பட்டன.
இது தொடர்பாகவே குறித்த மனுவை புத்தளம் டிப்போ முகாமையாளருக்கு வழங்கியதோடு மாநகர சபை உறுப்பினர் முர்ஷித் அவருடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.
குறித்த பஸ் வண்டியானது தற்போது கடவத்தை பகுதியில் சேவையில் உள்ளதாகவும், குறித்த மனுவுடன் இணைத்து தானும் வேண்டுகோள் கடிதம் ஒன்றை போக்குவரத்து சபை தலைவருக்கு அனுப்பி அந்த பஸ்களை புத்தளம் கொண்டு வர முயற்சிப்பதாகவும் முகாமையாளர் மாநகர சபை உறுப்பினர் முர்ஷித்திடம் தெரிவித்தார்.
அத்தோடு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தன்னை சந்தித்து இவ்வாறான விடயத்தை பேசியது சந்தோசமளிப்பதாகவும் போக்குவரத்து சபை முகாமையாளர் இதன்போது தெரிவித்தார்.
இந்த பஸ்ஸை திருப்பி புத்தளம் கொண்டு வருவதற்கான அடுத்தக்கட்ட முயற்சிகள் தொடர்பிலும் இங்கு பேசப்பட்டது.
இக்கலந்துரையாடலில் சமூக சேவையாளரும் இ.போ.ச. துறையின் முன்னாள் பணியாளருமான இஸ்ஸதீனும் பங்கேற்றிருந்தார்.
No comments