Breaking News

புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் சாதனையாளர்கள் பாராட்டி கௌரவிப்பு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் 2025 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த 14 மாணவர்களையும் மற்றும் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களையும் பாராட்டி கௌரவித்த நிகழ்வு அண்மையில் பாடசாலையின் அதிபர் எம்.எம். ஹுதைபா தலைமையில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலை உருவாக்கக் குழுத் தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ். ஆப்தீன் எஹியா, விசேட அதிதியாக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.என். றினோஸ், கௌரவ அதிதியாக முன்னாள் அதிபர் என். எம். எம். நஜீப் 

(ஓய்வு நிலை) மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வை பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை விஷேட அம்சமாகும். 


வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்கள் :

எம்.ஆர்.எப். றஹ்னா - 162

எம்.ஜே.எப். ஜெஸ்ரா - 147

எம்.என். ஐமன் - 143

ஏ.இ.ஏ. மஹ்தி - 141

எஸ்.எச்.எம். ருஹைம் - 141

எம்.ஆர்.எம். அஹ்ஸப் - 141

எம்.என்.எம். நிமாத் - 140

ஏ.ஜே. ஜெஸா பர்வீன் - 139

எம். எஸ். ஸனீஹா - 135

எம்.எப்.எப். ஸபா - 134

ஆர்.எப். றிதா - 133

ஏ.ஸல்ஹா அப்ரின் - 132

எம்.எல்.எம். ஹம்ராஸ் - 131

எம்.ஆர்.எப். றீஹா - 131




















No comments