மாதிரி முன்பள்ளியின் 50 வது வருட பூர்த்தியும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மாநகர சபை மாதிரி முன்பள்ளியின் 50 வது வருட பூர்த்தியும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும் அண்மையில் புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்துள்ள எம்.எச்.எம்.அஷ்ரப் பூங்காவில் இடம்பெற்றது.
ரெட் ரோஸ் மற்றும் சன் பிளவர் ஆகிய இரு இல்லங்களை சேர்ந்த சுமார் 20 மாணவர்கள் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
முன்பள்ளி ஆசிரியைகளான ஏ.டபில்யூ.எப்.நிஸாயா மற்றும் எம்.ஏ.எப்.சப்வானா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்ஷாத் அஹ்மத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மாநகர சபை உறுப்பினர்கள், ஏனைய முன்பள்ளி ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments