Breaking News

ஓய்வு நிலை அதிபர் எம்.எச்.எம். றாஸிக் ஜே.பி. மத்தியஸ்த சபை உறுப்பினராக நியமனம்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பெருக்குவட்டானை  சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் தேசகீர்த்தி எம்.எச்.எம். றாஸிக் (ஜே.பி) முந்தல் பிரதேச செயலக பிரிவுக்கு மத்தியஸ்த சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


நீதி அமைச்சு மற்றும் மத்திய சபைகள் ஆணைக்குழுவினால்  இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட பயிற்சி மற்றும் பரீட்சையில் சித்தியடைந்து மத்தியஸ்த சபைக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வு முந்தல் பிரதேச செயலகத்தில் அண்மையில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற போது இவர் தமக்கான நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டார்.


இவர் அகில இலங்கை சமாதான நீதவானாகவும், பெருக்குவட்டான் ஜும்ஆப்பள்ளி பரிபாலன சபை உறுப்பினராகவும் செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




No comments