"இலங்கை முஸ்லிம்களின் சொத்து" - கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்..!
✍️ எஸ். சினீஸ் கான்
இன்றைய அரசியல் சூழலில் பொறுப்புணர்வும் சமூக பற்றும் கொண்ட தலைவர்களை காண்பது மிக அரிது. ஆனால், கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே மக்களின் நலனுக்காகவும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், இனம்-மதம் கடந்து ஒட்டுமொத்த நாட்டின் ஒற்றுமைக்காகவும் பணியாற்றும் விடாமுயற்சி மிக்க தலைவராக திகழ்ந்து வருகிறார்.
இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில், அதிக சேவையாற்றிய தலைவர் எனும் சிறப்பு அவர் பெயருடன் என்றும் இணைந்திருக்கின்றது. கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், தொழில்வாய்ப்பு, மீள்குடியேற்றம், சமூகநீதி எனப் பல துறைகளில் அவர் பல்வேறு திட்டங்களை உருவாக்கி நிறைவேற்றியுள்ளார்.
அவர் உருவாக்கிய "காத்தான்குடி அருங்காட்சியகம்" முஸ்லிம்களின் வரலாறு, கலாசாரம், பண்பாடு, கல்வி, அரசியல் பங்களிப்பு போன்றவற்றை பாதுகாக்கும் மிகப் பெரும் முயற்சியாகும். இது முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்தை பாதுகாப்பதோடு, புதிய தலைமுறைகளுக்கான விழிப்புணர்வு மையமாகவும் விளங்குகிறது.
முஸ்லிம்களின் வரலாற்றை பாதுகாக்கும் இவ்வாறானதொரு திட்டத்தை எந்வொரு தலையைத்துவமும் சிந்திக்கவில்லை. இருந்தபோதிலும் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு சவால்களையும் பிரசிச்சினைகளையும் எதிர்கொண்டு இதை திறந்துவைத்தார். இன்னு முழு முஸ்லிம் மக்களாலும் பாராட்டப்பட்டு பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
கிழக்கு மாகாண ஆளுநராக இருந்தபோது, கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன, மத வேறுபாடுகளைத் தாண்டி, அனைத்து மக்களுக்குமான தலைமையாக செயல்பட்டார். சிங்களம், தமிம், முஸ்லிம் உட்பட முழு மாகாண மக்களுக்காக கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர், வீடமைப்பு, தொழில்வாய்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் சம நீதியாக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தார். அவரின் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கமும் சமூக நம்பிக்கையும் வலுவடைந்தன.
நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினராக தொடரும் கலாநிதி ஹிஸ்புல்லாஹ், தனது மாவட்ட மக்களின் நலனில் மட்டுமல்லாது, இலங்கை முழுவதிலும் உள்ள முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். அவரது உரைகள் தரவுகள் மற்றும் நடைமுறை சாட்சிகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டவையாக இருப்பதால், அது தேசிய அரசியலில் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இன்று உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகைதரும் நகரமாக காத்தான்குடி காணப்படுகிறது. இதற்கு முழுமையாக தன்மை அற்பணித்தவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆவார்.
அவ்வாறே, அவருடைய சந்தேச இராஜதந்திர உறவுகள் எமது நாட்டுக்கு பல உதவிகளை பெற்றுதந்திருக்கிறது என்பது வரலாறு.
அதேபோல், இஸ்லாமிய நிதிநெறிகளை அடிப்படையாகக் கொண்டு பைத்துல்மால் நிதியம் (Baitulmal Fund) என்ற திட்டத்தை தொடங்கும் முயற்சியை மேற்கொள்கிறார். இந்த நிதியம் மூலம் ஏழை எளிய மக்கள், மாணவர்கள், மருத்துவத் தேவையுள்ளோர் அனைவருக்கும் நேரடி உதவிகள் வழங்கப்படும். இது சமூகத்தில் உள்ள பொருளாதார சமமின்மையை குறைக்கும் நோக்குடன் உருவாக்கப்படுகிறது.
கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், அரசியல் என்பது பதவிக்காக அல்ல, பொறுப்புக்காகவே இருக்க வேண்டும் என்பதைத் தன்னுடைய செயலாற்றலின் மூலம் நிரூபித்துள்ளார். அவர் சமூகத்துக்காக உருவாக்கிய தொலைநோக்குப் பார்வையும், பயனுள்ள திட்டங்களும், தொடரும் பாராளுமன்ற பங்களிப்பும் அவரை இலங்கை அரசியல் வரலாற்றில் என்றும் நினைவில் வைத்திருக்கும்.
No comments