Breaking News

கற்பிட்டி கண்டக்குடாவில் குடும்பஸ்தர் தாக்கப்பட்டு மரணம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி கண்டக்குடா சலாமத்புரம் எனும் இடத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் வைத்து குழுவினரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் ஒன்று திங்கட்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது 


இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கண்டக்குடா சலாமத்புரம் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் மற்றும் உயிரிழந்தவரின் அயல் வீட்டு உரிமையாளர் ஆகியோர் கற்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments