Breaking News

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் கிளையின் அனுசரனையோடு புத்தளத்தில் புதிய காற்பந்தாட்ட தொடர் ஆரம்பமாக உள்ளது.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் காற்பந்தாட்ட சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளை உறுப்பினர்கள் அண்மையில் விஷேட சந்திப்பு ஒன்றினை புத்தளம் ஜம்இய்யத்துல் உலமா காரியாலயத்தில் மேற்கொண்டனர்.


இளைஞர்களிடையே போதைப்பொருள்களை ஒழிக்கும் நோக்கத்தில், "போதையற்ற சமூகம்" எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையும் புத்தளம் காற்பந்தாட்ட லீக்கும் இணைந்து புத்தளத்தில் காற்பந்தாட்ட தொடர் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.


அந்த வகையிலே ஜம்இய்யத்துல் உலமாவின் பூரண அனுசரனையோடு புதிய காற்பந்தாட்ட தொடர் கூடிய விரைவில் புத்தளம் நகரில் ஆரம்பமாக இருக்கின்றது.


புத்தளம் காற்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கழகங்களும் இந்த தொடரில் கலந்து கொள்ள இருக்கின்றன.


புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் தலைவர் முஹம்மது யமீன் தலைமையிலான அதன் உறுப்பினர்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ.ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி) தலைமையில் அதன் உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.






No comments