புத்தளம் லிவர்பூல் காற்பந்தாட்ட கழகத்தின் 36 வது வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் லிவர்பூல் காற்பந்தாட்ட கழகத்தின் 36 வது வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் வியாழக்கிழமை (07) இரவு புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்திருக்கின்ற கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
லிவர்பூல் காற்பந்தாட்ட கழகத்தின் தலைவர் எம்.ஜே.எம்.அஷ்ரப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த வருடாந்த பொதுக்கூட்டத்தில் லிவர்பூல் கழகத்தின் அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
லிவர்பூல் காற்பந்தாட்ட கழகம் போட்டிகளில் பெற்றுக்கொண்ட பல்வேறு விதமான சம்பியன் வெற்றிக்கிண்ணங்கள் இந்த கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
லிவர்பூல் கழகத்தின் மூத்த உறுப்பினர்களான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ.ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி) மற்றும் புத்தளம் இஹ்யாவுல் உலூம் அரபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் சகீனத் (இஹ்யாயி) ஆகியோரின் வழி நடாத்தலில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
அஷ்ஷெய்க் சக்கீனத்தின் கிறாஅத்துடன் ஆரம்பமான இக்கூட்டத்தில் தலைமை உரையினை அதன் தலைவர் அஷ்ரப்தீன் நிகழ்த்த விஷேட உரையினை அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் நிகழ்த்தினார். கழகத்தின் ஒற்றுமை மற்றும், எதிர்கால வெற்றிகள் தொடர்பாக தனது உருக்கமான உரையினை அவர் முன் வைத்தார்.
கழகத்தின் செயலாளர் கே.எம். ஹிசாமினால் கடந்த வருட பொதுக்கூட்ட அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கழகத்தின் பொருளாளர் எம்.சீ.எம். இஸ்மத்தினால் கழகத்தின் கணக்கு அறிக்கைகளும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.
கழக உப தலைவரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான ரனீஸ் பதூர்தீன் விஷேட உரையாற்றினார்.
ஆதரவாளர்கள் மற்றும் அபிமானிகள் அங்கத்தவர்களுடைய கருத்துக்களை தொடர்ந்து பழைய நிர்வாக சபை கலைக்கப்பட்டு புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாக சபை தலைவராக எம்.ஐ.எம்.மூசீனும், செயலாளராக எச்.ஆர்.ஹம்ருசைனும், பொருளாளராக ஆசிரியர் என்.எம்.ஜெசீமும், உதவி செயலாளராக ஏ.எம்.அன்சாரும், உப தலைவர்களாக புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரனீஸ் பதியுதீன், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். நில்பான், முகம்மது ரில்வான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாக சபை உறுப்பினர்களாக எம்.எச்.எம். ஷாபி, ஏ.எம்.சிஹான், ஏ.எம்.ரிஸான் மற்றும் முஹம்மது அபான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய சபை நிர்வாகத்தை பொறுப்பேற்று அதன் தலைவர் எம்.ஐ.எம். மூசின் அவர்களது கன்னி உரையை தொடர்ந்து இந்த வருடாந்த பொதுக்கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
லிவர்பூல் கழகத்தை கடந்த 2 வருட காலமாக மிகச்சிறப்பாக வழி நடாத்திய முன்னாள் தலைவர் அஸ்ரப்தீீனின் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் மிக அதிகமான வெற்றிகளை பதிவு செய்த லிவர்பூல் கழகம் ஓரிரு போட்டிகளில் மாத்திரமே தோல்வியை சந்தித்தது. அஸ்ரப்தீன் அவர்களின் தலைமையில் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பணத்தொகையை லிவர்பூல் கழகம் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
No comments