Breaking News

கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்..

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரும் கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான எம்.ஜே.எம் பைசல் தலைமையில் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி யின் வழிகாட்டுதலின் கீழ் செவ்வாய்க்கிழமை (26) கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கற்பிட்டி பிரதேசத்தின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், மீன்பிடி, உல்லாசப் பயணத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


கற்பிட்டி பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள்.  கற்பிட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என சகல அரச தரப்பு அதிகாரிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கடற்படை தளபதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







No comments