Breaking News

இலக்கிய நாடகப் போட்டியில் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் தேசிய மட்டத்துக்கு தெரிவு.

(உடப்பு செய்தியாளர்-க.மகாதேவன்)

மாகாண மட்ட தமிழ் மொழித் தினப்போட்டியில் புத்தளம் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் இலக்கிய நாடகப் போட்டியில் தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


குருநாகல் வாரியபொல  ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் நேற்று (13)  நடைபெற்ற  மாகாணமட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று  தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளனர்.


பாடசாலையின் அதிபர் வழிகாட்டலில், ஆசிரியர்களின் சிறந்த பயிற்றுவித்தலின் பிரகாரம் இந்த வெற்றி கிடைக்கப்பெற்றிருக்கின்றது.


இதே வேளை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் பாராட்டி வாழ்த்தியுள்ளது.





No comments