பெண்கள் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் தாரகை அமைப்பு ஏற்பாடு செய்த பெண்கள் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்திருக்கின்ற கிரீன் மல்ஹாஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் எம்.எப்.எம்.ரின்சாத் அஹ்மத் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்கள் தொழில் முனைவோர்கள் மாநகர முதல்வரினால் கௌரவிக்கப்பட்டனர்.
மாநகர முதல்வர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
பெண்கள் சமூக முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் எனக் குறிப்பிட்டு, அவர்கள் செய்யும் முயற்சிகள் மற்றும் சாதனைகள் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதைக் வலியுறுத்தினார்.
மேலும், பெண்கள் தொழில் முனைவோரின் மதிப்பும், கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு, பெண்கள் சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் எடுத்துக்காட்டான ஒரு சிறந்த நிகழ்வாக அமைந்திருந்தது.
புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இப்லால் அமீன் உள்ளிட்ட மற்றும் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்று இருந்தனர்.
No comments