ஒற்றுமையை சிதைக்க நினைக்கும் இனவாத அரசியலை முடிவுக்கு வருவோம்!
வடக்கு – கிழக்கை “தமிழர் தாயகம்” எனக் கூறி அரசியல் செய்யும் சாணக்கியனின் கூற்று மிகப்பெரும் இனவாதத்தையும், நாட்டைப் பிளக்கும் முயற்சியையும் வெளிப்படுத்துகிறது என்று ஐக்கிய காங்கிரஸின் செயலாளர் சப்வான் சல்மான் தெரிவித்தார்.
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களின் முகநூல் பதிவு ஒன்றை சுட்டிக்காட்டி கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு சப்வான் சல்மான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்க்காமல், இன அடிப்படையில் வெறுப்பை விதைத்து, தன் அரசியல் லாபத்துக்காக மக்களை ஏமாற்றும் சாணக்கியனின் முகமூடி மீண்டும் கிழிந்து விழுந்துள்ளது.
வடக்கும், கிழக்கும் எப்போதும் இலங்கையின் பிரிக்க முடியாத அங்கங்களே! “தமிழர் தாயகம்” எனப்படும் பிரிவினை நியாயங்கள், நாட்டின் நிலைத்தன்மைக்கும் மக்களின் ஒற்றுமைக்கும் பெரும் ஆபத்தான விஷங்கள் ஆகும்.
இனவாதத்தை ஆயுதமாகக் கொண்டு மீண்டும் மக்கள் மனதைப் பிரிக்க நினைப்பவர்களுக்கு இலங்கை மக்களின் திடமான பதில் — ஒன்றுபட்ட இலங்கை மட்டுமே! என்று குறிப்பிட்டார்.
No comments