Breaking News

கற்பிட்டி மண்டலக்குடாவில் இரு வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்டலகுடா கிராம அலுவலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு கற்பிட்டி பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என்  பிரியதர்ஷினி தலைமையில் இடம்பெற்றது.


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவு செய்யப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீடமைப்பு கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்தத் திட்டம் பொருளாதாரக் கஷ்டங்கள் காரணமாக வீடுகளைக் கட்ட முடியாத குடும்பங்களுக்கு நிரந்தரமான தீர்வைக் கொடுப்பதுடன், அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடாகவும் கருதலாம்.


இந்நிகழ்வில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பைசல், கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ்,கற்பிட்டி பிரதேச சபையின் மண்டலகுடா உறுப்பினர் சுவிஸ் பைசல் அரச அலுவலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.









No comments