Breaking News

புத்தளம் ரவ்லதுல் அத்பால் முன்பள்ளி மற்றும் அதன் கிளை நிறுவனமான ஐ.எச்.எச். முன்பள்ளி ஆகியன இணைந்து நடாத்திய இல்ல விளையாட்டு போட்டிகள்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் ரவ்லதுல் அத்பால் முன்பள்ளி மற்றும் அதன் கிளை நிறுவனமான ஐ.எச்.எச். முன்பள்ளி ஆகியன இணைந்து நடாத்திய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை (16) முழு நாளும் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


ஹுத் ஹுத், அபாபீல், ஹூத், புராக் ஆகிய நான்கு இல்லங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.


ரவ்லதுல் அத்பால் முன்பள்ளியின் அதிபர் பாத்திமா நஸ்முன் மற்றும் ஐ.எச்.எச்.முன்பள்ளியின் அதிபர் பாத்திமா சுகுரா ஆகியோரின் தலைமையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றன.


நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் கலந்து கொண்டார்.


புத்தளம் மாநகர சபையின் உறுப்பினர்களான எம்.எம்.முர்ஷித், எம்.டீ.எம்.சஹ்ரான், நிலங்கா தில்ருக்ஷி, சித்தி சலீமா உள்ளிட்ட அதிபர்கள், முன்பள்ளிகளின் ஆசிரியைகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 


50 மீட்டர் ஓட்டம், முயல் ஓட்டம், போத்தலில் நீர் நிறைத்தல், தாரா நடை,  நிறம் சேகரித்தல், தடை தாண்டி ஓட்டம், வளையம் புகுதல், நீர் நிறைத்தல், தொப்பி மாற்றுதல் மற்றும் உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடந்தேறின.


போட்டிகளில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பெறுமதியான பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.















No comments