Breaking News

கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருதில் அபிவிருத்தி செய்யப்பட்ட வீதி திறப்பு விழா.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒஸ்மன் வீதிக்கு எதிர்ப்பக்கமாக அமைந்துள்ள புதிய வீதி கல்முனை மாநகர சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.


இந்த வீதி நேற்று வியாழக்கிழமை (31) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் பங்குபற்றுதலுடன் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம். ஆஷிக், கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், உள்ளுராட்சி உத்தியோகத்தர் தாரிக் அலி சர்ஜூன் மற்றும் டொக்டர் எச்.எம். றசீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.


கிழக்கு மாகாண சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான PSDG திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் இவ்வீதி கொங்க்ரீட் இடப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறது.


சாய்ந்தமருது ஒஸ்மன் வீதிக்கு எதிர்ப்பக்கமாக அமைந்துள்ள புதிய வீதியானது பிரதான வீதியில் இருந்து பொலிவேரியன் குளக்கட்டு வீதியை இணைக்கும் முக்கிய பாதையாக அமைந்திருக்கிறது. கடந்த காலங்களில் இவ்வீதி முழுமைப்படுத்தப்படாமல் மிக மோசமான நிலையில் காணப்பட்டதால் இப்பகுதி மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.


இந்நிலையில் இந்த வீதியை புனரமைப்பு செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்கள் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.


இதையடுத்து PSDG - 2025 திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 1.65 மில்லியன் ரூபா செலவில் இந்த வீதி கொங்க்ரீட் இடப்பட்டு, மிகவும் அழகாக பூரணப்படுத்தப்பட்டிருக்கிறது.


இதற்காக இப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி ஆகியோருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.









No comments