Breaking News

விருதோடை யுனைடட் இளைஞர் கழக ( United Youth Club)தின் புதிய நிர்வாகத் தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

விருதோடை யுனைடட் இளைஞர் கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு வியாழக்கிழமை (03) கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது.


இந் நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜே. எம். பைசல், கிராம உத்தியோகத்தர் ஐ.எப். பர்வின், அபிவிருத்தி உத்தியோகத்தர் பரீஹா மற்றும் முந்தல் பிரதேச செயலக இளைஞர் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகக் குழு விபரம்


தலைவர் - எம்.யூ. நபீஸ்

செயலாளர் - எம். எம். ஏ. றாஸா

பொருளாளர் - எச். எம். றுஸ்தி

உப தலைவர் - பீ.எஸ்.எம். ஹைஸ்

உப செயலாளர் - எம்.ஆர். றிஸ்லீன் அஹமட்

ஒழுங்கு படுத்துனர் - எம். ஜே. எம். ஹூமைத்

விளையாட்டு பொறுப்பாளர் - பீ.எம். அஜ்மல்

கலாசார பொறுப்பாளர் - ஏ.எம். இர்ஷாத்

கல்வி பொறுப்பாளர் - எம். வை. எம். பர்வீஸ்

கணக்கு பரிசோதகர் -  எம்.சிபாக்


ஆகியோருடன் கழகத்தின் வழிகாட்டிகளாக  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம் பைசல், விருதோடை ஜூம்ஆ பள்ளித் தலைவர் பீ.எஸ்.எம். றிஸான், சேனைக்குடியிருப்பு பள்ளித் தலைவர் எம். எச். எம். அமீர், கிராம உத்தியோகத்தர் ஐ.எப்.  பர்வின், அபிவிருத்தி உத்தியோகத்தர் பரீஹா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






No comments