புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் குடி நீர் திட்டம் அங்குரார்ப்பணம்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் "பல்ஸ்ட்" பழைய மாணவர் அமைப்பு புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க, அப்பாடசாலை மாணவர்களுக்கான குடிநீர் திட்டத்தை வழங்கியுள்ளது.
இந்த குடிநீர் திட்டம் அமைப்பின் தலைவர் அஷ்ரப்தீன் உட்பட அங்கத்தவர்கள் மற்றும் பாடசாலை அதிபர் எஸ்.ஆர்.முஹ்ஸி, பிரதி அதிபர், அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் அண்மையில் (02) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இத்திட்டமானது 2001 க.பொ.த.சாதாரண தரம், 2004 உயர் தரம் கற்ற மாணவர்களின் நிதிப்பங்களிப்பின் மூலமும் அதே வேளை தொடர்ந்தும் குடிநீர் வழங்குவதற்கான செலவீனமும் பொறுப்பேற்று செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாடசாலை அதிபர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி நன்றிகளை தெரிவித்துள்ளார்.
No comments