Breaking News

திவுறும்பொல குளி/காஸிம் முஸ்லிம் வித்தியாலயத்தின் மைதான சுற்றுமதில் நிர்மாணப்பணி ஆரம்ப நிகழ்வு

திவுறும்பொல குளி/காஸிம் வித்தியாலயத்தின் 60 ஆண்டுகள் பூர்த்தி விழாவை (வைரவிழா) முன்னிட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ்  பாடசாலை வளாகத்தை சுற்றி வேலிமைப்பின் ஒரு கட்டமாக 100 மீட்டர் அளவு வேலைகள் நேற்று (29) செவ்வாய் கிழமை அதிபர் ஏ. டப்ளியு. எம். ரபீக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இதற்கான நிதியுதவியை அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் அல் ஹாஜ் துல்பிகார் (ஸுல்பி) அவர்கள் தனது மறைந்த பெற்றார்களின் பெயரில் (சதகதுன் ஜாரியாவாக) வழங்கியுள்ளார்.


இந்நிகழ்வில்  பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


ஷாம் மௌலானா














No comments