புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளி மாணவர்கள் புத்தளம் பொது நூலகத்துக்கு விஜயம்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரின் தமிழ் மொழி மூல முதலாவது முன்பள்ளி யான ஐ.எப்.எம். முன்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் அதன் பொறுப்பாசிரியை பௌசுல் ரூஸி சகிதமாக வியாழக்கிழமை (24) காலை புத்தளம் பொது நூலகம் மற்றும் சிறுவர் பூங்காவுக்கு கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டனர்.
புத்தளம் பொது நூலகத்துக்கு விஜயம் செய்த மாணவர்களையும் ஆசிரியையையும் பிரதம நூலகர் கே.எம்.நிஷாத் உள்ளிட்ட நூலக ஊழியர்கள் குழுவினர் அன்போடு வரவேற்றனர்.
புத்தளம் பொது நூலகத்தில் அமைந்திருக்கின்ற சிறுவர் பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற நூலக ஊழியர்கள் மாணவர்களுக்கு கதைகள் கூறி , பாடல்கள் பாடி மாணவர்களை மகிழ்வித்தனர்.
No comments