Breaking News

புத்தளம் கல்பிட்டி தேத்தாப்பளை பாடசாலை மாணவிகள் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் வரலாற்று சாதனை.

எம்.யூ.எம்.சனூன்

அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் புத்தளம், தேத்தாப்பளை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய மாணவிகள் 100 சத வீதம் சித்தியை பெற்று க.பொ.த. உயர்தரம் கற்பதற்கு தகுதியைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.


இதே வேளை விஞ்ஞான பாடத்தில் 80 வீதம் சித்தியையும், ஏனைய அனைத்து பாடங்களிலும் 100 வீதம் சித்தியினைப் பெற்றும் பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.


அந்த வகையில் இப்பாடசாலையின் பெறுபேற்றில் கடந்த காலங்களில் எவருமே எட்டாத ஒரு மைல் கல்லை கெ.வி.கெ.கயானி நதூஷா 7ஏ, 2 பீ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.


மெ.ஹிருணி மதூசா 2 பீ, 2 சீ, 5 எஸ், தே.லீனா ரோஸ்  1 ஏ, 1 பீ, 3 சீ, 2 எஸ்,  அ.இசானி ரனூசிகா 2 பீ, 3 சீ, 4 எஸ்,  சி.செனூரி தெவ்மினி 3 பீ, 1 சீ, 5 எஸ் என்ற பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.


குறிப்பாக இவர்கள் எந்த வித தனியார் வகுப்புகளுக்கும் செல்லாது வெறுமனே பாடசாலைக் கல்வியும் மாணவர்களின் சுய கற்றலுமே என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த காலங்களில் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் புத்தளம் கல்வி வலயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த இப் பாடசாலை, இம்முறை  புத்தளம் கல்வி வலயத்தின் தரப்படுத்துதலில் நிச்சயம் சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை.


இந்த வளர்ச்சிக்கான வேலைத்திட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி பல ஆலோசனைகள் வழிகாட்டல்களை வழங்கி ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஊக்குவித்த பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி டெல்சியா அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றி தெரிவிப்பதோடு  அவருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.




No comments