நோயாளிக்காக துஆச் செய்வோம்!
புத்தளத்தைச் சேர்ந்த சகோதரர், அஹ்மத் ஹினாயத், அவர்கள், குவைத் நாட்டில் வேலைக்காக சென்றுள்ளார்.
அங்கு, அவர் கடும் சுகையீனமுற்றதன் காரணமாக, வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர், பூரண சுகம்பெற்று நாட்டிற்கு திரும்பி வந்து குடும்பத்தோடு சேர்ந்துகொள்ள, எமது சேவையோடு இணைந்திருக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்களின் துஆக்களை குடும்பத்தார் எதிர்ப்பார்க்கின்றனர்.
கிடைத்த தகவலின்படி, வைத்திய அறிக்கையில் எதிர் பார்த்தபடி எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் இன்னும் சில சிகிச்சைகள் செய்து, அதன் அறிக்கையையும் தருகின்றோம் என குவைத் நாட்டு வைத்தியசாலை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!
இந்த நாட்களில் எத்தனையோ ஸாலிஹான நல்ல மக்கள் தாஷுஆ , ஆஷுரா நோன்பை நோற்கின்றனர்.
அவர்களும், ஏனையோரும் அஹ்மத் ஹினாயத் அவர்களுக்காகவும், ஏனைய நோயாளிகளுக்காகவும், பூரண சுகத்திற்கு அள்ளாஹுத்தஆலாவிடம் துஆச் செய்துகொள்ளுமாறு குடும்பத்தார் கேட்டுக்கொள்கின்றனர்.
-தகவல் உதவி:
மைத்துனர் - அஸீர்.
-ஜஸாகுமுள்ளாஹு ஹைறன்!
No comments