Breaking News

சிலாபம் - குருணாகல் வீதியில் ஹெட்டிப்பொல கிரிபொகுண பிரதேசத்தில் விபத்து.

 (உடப்பு - க.மகாதேவன்)

சிலாபம்-குருணாகல் வீதியில் ஹெட்டிப்பொல கிரிபொகுண பிரதேசத்தில் இன்று (5) பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன் போது டிபர் ரக வாகனம், சிறிய பட்டா வாகனம், அத்துடன் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்தவர்கள் விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளனர். டிப்பர் வாகனத்தின் பின்னால் பட்டாரக லொறி மோதியதுடன் அதன் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி பாரிய சேதத்துக்குள்ளாகி உள்ளது.


இதன் போது மூன்று பேருக்கு படுகாயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஹெட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.









No comments