Breaking News

புத்தளம் முல்லிபுரம் முதல் நாளாம் கட்டைவரையுள்ள பிரதேச நலனுக்காக முக்கிய தீர்மானம் – தூய தேச கட்சி உறுப்பினர் பதுருஸ் சமான் சபையில் வலியுறுத்தல்

புத்தளம் பிரதேச சபையின் முதல் கூட்டத்தில், தூய தேசத்திற்கான கட்சியின் உறுப்பினர் திரு. பதுருஸ் சமான் அவர்கள் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியைத் தொடங்கியுள்ளார்.


பல்வேறு பிரச்சினைகளுக்கும் துன்பங்களுக்கும் முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் முல்லிபுரம் முதல் நான்காம் கட்டை வரை உள்ள மக்களின் குறைகளை நிரந்தரமாக தீர்க்க, அந்தப் பகுதிகளை புத்தளம் மாநகர சபையுடன் இணைப்பதே ஒரே தீர்வு என அவர் சபையில் வலியுறுத்தினார்.


இப்போது அந்த பிரதேச மக்கள், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அரச தேவைகளுக்காக முந்தல் பிரதேச செயலகத்திற்கும், மதுரங்குளியில் உள்ள பிரதேச சபைக்கும் சென்று வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இது அவர்களுக்குப் பெரிய சிரமமாக உள்ளது.


இதற்கான தீர்வை அரசியல் வாதங்களைத் தாண்டி, எல்லா உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஆதரிக்க வேண்டும் எனவும், இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மட்டுமே மக்கள் நலன் அடைய முடியும் எனவும் பதுருஸ் சமான் இன்று சபையில் வலியுறுத்தினார்.




No comments