Breaking News

வட மேல் மாகாணத்தில் புத்தளம் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி க. பொ.த. (உ/த) கலைப்பிரிவில் முதலிடம். அதிபர் வடமேல் மாகாண ஆளுநரினால் கௌரவிப்பு.

எம்.யூ.எம்.சனூன்

அண்மையில் வெளியான க.பொ.த. (உயர் தர) பெறுபேற்றின் பிரகாரம் கலைப்பிரிவில் வட மேல் மாகாணத்தில் புத்தளம் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது. இதன் நிமித்தம் பாடசாலையின் அதிபர் வடமேல் மாகாண ஆளுநரினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.


வெளியான க. பொ.த. (உயர் தர) பரீட்சை 2024  பெறுபேறுகளின் தரவுகள் பிரகாரம் புத்தளம் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிகூடிய சித்திகளை பெற்றுள்ளது.


அந்த வகையில் பரீட்சைக்கு தோற்றிய 26 மாணவர்களும் குறித்த இந்த பரீட்சையில்  சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்வதற்கு விண்ணப்பிக்க தகுதியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வடமேல் மாகாணத்தில் முதலாம் நிலையை அடைந்த கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியை கௌரவிக்கும் முகமாக வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணகுலசூரிய அவர்களினால் பாடசாலையின் அதிபர் எம். எச்.எம்.தௌபீக் சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி அண்மையில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.


இந்த அடைவுதனை பெற்றுத் தருவதற்கு முயற்சித்த பாடசாலை அதிபருக்கு ஆசிரியர்கள், பாடசாலை முகாமைத்துவ குழுவினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பெற்றார் அனைவரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.






No comments