Breaking News

எண்களில் திறமையைக் கொண்டாடுதல் - கணித வழிகாட்டி பாராட்டு விழா 2025.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் சிப் அபகஸ் கல்வி நிறுவனம் புத்தளம் பீனிக்ஸ் சர்வதேச பாடசாலையுடன் பெருமையுடன் இணைந்து நடாத்திய கணித வழிகாட்டி பாராட்டு விழா அண்மையில்  புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக அமைந்திருக்கின்ற நகர மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.


இந்த நிகழ்வு பிராந்தியம் முழுவதிலுமிருந்து கணித விநாடி வினா போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற கணித திறமையாளர்களின் சிறந்த சாதனைகளை கௌரவித்து இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக சிப் அபகஸ் கல்வி நிலையத்தின் நாட்டுக்கான உயர் அதிகாரி ரிஷார்ட் ரஹீம் மற்றும் சிப் அபகஸ் கல்வி நிலையத்தின் வணிக மேம்பாட்டு அதிகாரி இன்ஷாப் நவாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இளம் திறமையானவர்களின் ஆர்வம் மற்றும் கல்வி மனப்பான்மை என்பன இந்நிகழ்வில் பிரதிபலிக்கப்பட்டன.


சிப் அபகஸ் மூலம்  நம்பிக்கையான இளம் மனங்களை வடிவமைப்பதில் புத்தளம் அபகஸ் கல்வி நிறுவனம் தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










No comments