வவுனியாவில் உயர் தர வணிகப் பிரிவு மாணவர்களுக்கு வணிகக் கல்வி கருத்தரங்கு.
எம்.யூ.எம்.சனூன்
“வியாபாரமும் துணை நிலைச் சேவைகளும்” என்ற தலைப்பில் அண்மையில் (18) . வணிகக் கல்வி கருத்தரங்கு வவுனியாவின் இரம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மாலை 2 மணியளவில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த கருத்தரங்கினை வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறையின் சந்தைப்படுத்தல் கழகமும் மற்றும் வவுனியா கல்வி வலயமும் இணைந்து இந்த உயர்தர வணிகப் பிரிவு மாணவர்களுக்காக சிறப்பாக மேற்கொண்டனர்.
வவுனியா கல்வி வலயத்தை சேர்ந்த 14 பாடசாலைகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் இதில் கலந்து கொண்டனர்.
இக்கருந்தரங்கின் வளவாளர்களாக சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர்களான எஸ்.ஏ.யூட் லியோன், திருமதி . கயேந்தி, சிவநேந்திரா மற்றும் துஷ்யந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு அமர்வும் மாணவர்களுக்கு ஆழமான விளக்கங்கள், நிஜ வாழ்க்கை உதாரணங்கள் மற்றும் கலந்துரையாடல்களை வழங்கி, அவர்களின் கல்விக்கு மேலும் செறிவூட்டும் விதமாக அமைந்திருந்தது.
இந்த முயற்சியானது வவுனியா பல்கலைக்கழகத்தின் சமூகத்தில் ஈடுபாடும், வளமான கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பதையும், கல்வி கருந்தரங்குகளை முன்னெடுக்கும் செயலில் ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகிறது.
இக்கருத்தரங்கினை வணிகக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி சுபாஜினி மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர் சி.சிவநேந்திரா ஆகியோர் சிறப்பாக ஒழுங்கு செய்ததுடன் அனுமதியளித்த துணைவேந்தர் பேராசிரியர் ஏ. அற்புதராசா, பீடாதிபதி பேராசிரியர் யோ. நந்தகோபன் மற்றும் வலய கல்வி பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் நன்றியை தெரிவித்ததுடன் இச்சேவை தொடர வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
No comments