புத்தளம் - சிலாபம் வீதியின் தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் பஸ் மரத்துடன் மோதி விபத்து
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை (04) நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments