Breaking News

புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலய இரு அணிகளும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு தகுதி.

எம்.யூ.எம். சனூன்

வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2025 ஆம் வருடத்திற்கான காற்பந்தாட்டப் போட்டிகளில் புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலய இரு  அணிகளும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


இந்த போட்டிகள் அண்மையில் புத்தளம் சாஹிரா மற்றும் எருக்கலம்பிட்டி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றன.


இப்போட்டிகளில் பங்கேற்ற புத்தளம் கல்வி வலயத்தின் கஷ்டப்பிரதேச பாடசாலையான புத்தளம் வெட்டாளை அஸன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தின் 16 மற்றும் 18 வயது அணிகளே முதலாம், இரண்டாம் இடங்களை பெற்று அகில இலங்கை ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.


16 வயதிற்குட்பட்டோருக்கானபோட்டிகள் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் (15) நடைபெற்றபோது சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரி அணியுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெட்டாளை அசன் குத்தூஸ் அணி 03 : 01 என்ற கோல் கணக்கில்  தோல்வியுற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது.


18 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் புத்தளம் எருக்கலம்பிட்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் வென்னப்புவ ஜோன் பௌல் அணியை எதிர்கொண்ட வெட்டாளை அசன் குத்தூஸ் அணி 02 : 01 கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது. 


இந்த இரண்டு அணிகளும் தேசிய மட்டத்துக்கு தெரிவாக அர்ப்பணித்த அதிபர் ஏ.ஜே.எம்.இல்ஹாம்,  பிரதி அதிபர் ஏ.ஜே.எம்.இனூஸ், விளையாட்டுப்  பயிற்றுவிப்பாளரான எச்.என்.ஏ.முஹம்மது, விளையாட்டு துறை பொறுப்பாசிரியர்களான என்.எம்.ஜெஸீம், எம்.ஆர்.எம்.ஜபீர் ஆகியோருக்கும், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் பெற்றோர்கள் ஏனைய நலன் விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலை முகாமைத்துவ குழுவினர் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.







No comments