Breaking News

குருணாகல் புத்தளம் வீதியில் விபத்து

 (உடப்பு-க.மகாதேவன்)

குருணாகல் புத்தளம் வீதியில் பாதெனிய அவுலேகம பிரதேசத்தில் இன்று (16) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள், மற்றும் கார்,சிறிய ரக லொறி ஆகியவைகள் விபத்துக்குள்ளாகி ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.


இதன் போது காரின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாக அருகிலுள்ள மரம் ஒன்றின் மீது கார் மோதியதுடன் மூன்று வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










No comments