JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் வர்த்தக சமூகத்தின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு. ஆளுனர் நஸீர் அஹமட் தெரிவிப்பு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்று தருவதாக வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் உறுதியளித்துள்ளார்.


புத்தளம் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரி சங்கத்தின் (PUTWA) குழுவினர்கள் வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத் அவர்களை அண்மையில் ஆளுனர் அலுவலகத்தில் சந்தித்து முன்வைத்தனர்.


புத்தளம் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வந்த வர்த்தக சங்கத்தினர் இது தொடர்பான மகஜர் ஒன்றையும் ஆளுநர் நஸீர் அஹமதிடம் கையளித்தனர்.


இதன் போது PUTWA வினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வினை தான் முன்னின்று நிவர்த்தி செய்து தருவதாகவும் ஆளுநர் உறுதியளித்தார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال