JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி அல் அக்‌ஸாவிற்கு புதிய அதிபராக அமீர் நியமனம்

(கற்பிட்டி எம் எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த யூ.எம்.எம் அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.


கற்பிட்டி பொது மக்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலையின் அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர் அமைப்பு என சகலரினதும் முயற்சியினால் நீண்ட நாட்களைக்கு பின் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு அதிபர் சேவையின் தரம் 1 ஐச் சேர்ந்த அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் யூ.எம்.எம் அமீர் இன்று திங்கட்கிழமை (12) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளதையும் குறிப்பிடத்தக்கது.


மேற்படி அதிபரை பாடசாலைக்கு நியமிப்பதற்கு ஆரம்பம் முதல் உதவி செய்து முயற்சிகளை மேற்கொண்ட சகலருக்கும் கற்பிட்டி மக்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.


புதிய அதிபர் யூ.எம்.எம். அமீர் அவர்களுக்கு அல் அக்‌ஷா தேசிய பாடசாலையின் பலய மாணவன் என்ற வகையிலும். மற்றும் கற்பிட்டி மக்கள் சார்பாகவும் ல வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெறிவித்துகொள்கிறோம்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال