Breaking News

புத்தளம் இலவன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சித்திரப் பாட செயலமர்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட இலவன் குளம் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கான சித்திரப் பாட விழிப்புணர்வு செயலமர்வு அண்மையில் இடம்பெற்றது.


கஷ்ட பிரதேச பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கென இந்த விசேடமான சித்திரப் பாட செயலமர்வு இடம்பெற்றது.


பாடசாலையில் கல்வி பயில்கின்ற தரம் 11, 12 மற்றும் 13 ஆகிய தரங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த சித்திரப் பாட செயல் அமர்வில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.


பாடசாலை அதிபர் ஏ.ஏ.பாரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதான வளவாளராக புத்தளம் வலய  கல்விப் பணிமனையின் சித்திரப்பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகரும், முன்னாள் தேசிய கல்வி நிறுவகத்தின் சித்திரப் பாட விரிவுரையாளரும், நாடறிந்த ஓவியருமான கலாநிதி எம்.எம்.முஹம்மது கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார்.








No comments