புத்தளம் மாநகர சபை எல்லைக்குள் சுற்றித் திறிந்த கட்டாக்காலி கால்நடைகள் பிடிக்கப்பட்டது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் மாநகர சபை எல்லைக்குள் சுற்றித் திறிந்த கட்டாக்காலி கால்நடைகளை புத்தளம் மாநகர சபையின் விசேட குழுவினால் பிடிக்கப்பட்டு மாநகர சபையின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது
மாநகர சபையின் பொது அறிவித்தலுக்கு அமைய தற்போது மாநகர சபையினால் பிடிக்கப்பட்டுள்ள மேற்படி கால்நடைகளை உரிமையாளர்கள் குறித்த கால்நடை களுக்கான தண்டப்பணத்தை புத்தளம் மாநகர சபைக்கு செலுத்தி கால்நடைகளை பெற்றுக் கொள்ளுமாறும் குறித்த தினத்திற்குள் தண்டப் பணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளாத கால்நடைகள் பகிரங்க ஏலத்திற்க்கு விடப்படும் எனவும் புத்தளம் மாநகர சபை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments