மாதம்பை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திலும் க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
எம்.யூ.எம். சனூன்
அரசின் க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை மாதம்பை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திலும் வெற்றிகரமாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் பாடசாலை சுற்றாடலை தூய்மை படுத்தும் வகையில் பாடசாலை வளாகம், மைதானம், வகுப்பறை சுத்தம், ஆய்வு கூடங்கள், நீர் குழாய்த் தொகுதி, மற்றும் மலசலகூட தொகுதி உள்ளடங்கலாக பல்வேறு இடங்களிலும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரது ஒத்துழைப்புடனும், பங்களிப்புடனும் இவ் வேலைத்திட்டமானது சிறந்த முறையில் நடைபெற்றன.
சமூகத்திற்கு இது தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வகையில் வீதி நாடகம், பதாதைகள் ஏந்திய மாணவர்களின் ஊர்வலமும் மேலும் இந்நிகழ்வை மெருகூட்டின.
இறுதியாக சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் உணவு போசணை தொடர்பான செயலமர்வு ஆசிரியை எப்.பஸ்மினாவினால் நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments