முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.- கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தனது அனுதாபச் செய்தியில் தெரிவிப்பு.
முன்னாள் அமைச்சர், மூத்த அரசியல் தலைவர் காமினி லொக்குகே அவர்களின் மறைந்த செய்தி அறிந்து மிகக் கவலையடைந்தேன். அரசியல் ரீதியில் உயர் பதவிகளை வகித்த அவர் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் மறைவு குறித்து வெளியிட்ட அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே எனது நெருக்கமான நண்பர், நீண்டகாலமாக என்னோடு அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுபட்டவர், எப்போது எந்த தேவைக்கு போனாலும் பண்பாக பேசக்கூடியவர். அதேபோன்று அவருடைய பிரதேசம், தொகுதி மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.
அவர் சமூகத்திற்கும் நாட்டிற்கும் செய்த மகத்தான சேவைகள் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.
காமினி லொக்குகே அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். - என அவரது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.
- ஊடகப்பிரிவு
No comments