புத்தளத்தில் சுவ சேவை நிலையத்தின் கற்றல் மற்றும் சுகாதாரம் சார்ந்த பொருட்கள் வழங்கும் நிகழ்வு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
அவுஸ்திரேலியாவின் தொண்டு நிறுவனமான சுவ சேவை நிலையத்தின் புத்தளம் கிளையின் ஊடாக கற்றல் உபகரணங்கள் மற்றும் சுகாதாரம் சார்ந்த பொருட்கள் வழங்கும் நிகழ்வு புத்தளத்தில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 பெண்களுக்கு பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களும் மற்றும் சுகாதாரம் சார்ந்த பொருட்கள் என்பன வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரணீஸ் பதுர்தீன், மாநகர சபை உறுப்பினர் ஷதா பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments