கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் 2025; - கல்முனை பள்ளி வீதியில் காபட் இடும் பணி முன்னெடுப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் 2025 இன் முதற்கட்டமாக அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட கல்முனை “பள்ளி வீதிக்கான” காபட் இடுகின்ற வேலை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவாவா அவர்களின் வேண்டுகோளின் பேரில் இன்று செவ்வாய்க்கிழமை (22) வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் இஸட்.ஏ.எம். அஸ்மிர் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம்.ஆரிப், ஒருங்கிணைப்பாளர் எம்.ஐ. நஜீம் மற்றும் பிரதேசத்தின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவ்வீதிப் புனர்நிர்மாணத்தில் கலந்து கொண்டனர்.
No comments